பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின். – குறள்: 216
– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்
கலைஞர் உரை
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின்; அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.
மு. வரதராசனார் உரை
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சோந்தால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
G.U. Pope’s Translation
A tree that fruits in th’ hamlet’s central mart,
Is wealth that falls to men of liberal heart.
– Thirukkural: 216, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues