பழைமை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 801

பழைமை எனப்படுவது யாதுஎனின்

பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
குறள்: 801

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின், அது பழைமையான நண்பர் தாம்விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறைநட்பாம்.



மு. வரதராசனார் உரை

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.



G.U. Pope‘s Translation

Familiarity is friendship’s silent pact,
That puts restraint on no familiar act.

 – Thirukkural: 801, Familiarity, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.