பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. – குறள்: 657
– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறிவிலாதார் தீவினைகளைச் செய்து அவற்றாற் பழியைத் தம் தலைமேல் ஏற்றுக் கொண்டு பெற்ற செல்வத்தைவிட; அப்பழியை மேற்கொள்ளாத அறிவுடையோரின் கடுவறுமையே சிறந்ததாம்.
மு. வரதராசனார் உரை
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மை யோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
G.U. Pope’s Translation
Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain.
– Thirukkural: 657, Purity in Action, Wealth
Be the first to comment