
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்
எழுபது கோடி உறும். – குறள்: 639
– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்
கலைஞர் உரை
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நன்மை செய்கிறவன்போல் அருகிலிருந்து கொண்டு தீமையை எண்ணும் அமைச்சன் ஒருவனில்; அரசனுக்குப் பக்கமாகவே எழுபது கோடிப் பகைவர் அமைவர்.
மு. வரதராசனார் உரை
தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
G.U. Pope’s Translation
A minister who by king’s side plots evil things Worse woes than countless foemen brings.
– Thirukkural: 639, The Officeof Minister of State, Wealth
Be the first to comment