குருவிரொட்டி இணைய இதழ்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் – குறள்: 475


பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
குறள்: 475

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வைக்கோலினும் நொய்ய மயில்தோகை யேற்றிய வண்டியும் அச்சு முறியும் ; அப்பொருளை வண்டிதாங்கும் அளவிற்கு மிஞ்சி யேற்றின் .



மு. வரதராசனார் உரை

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.



G.U. Pope’s Translation

With peacock feathers light you load the wain; Yet, heaped too high, the axle snaps in twain.

 – Thirukkural: 475,The Knowledge of Power, Wealth