பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு. – குறள்: 773
– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்
கலைஞர் உரை
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும்.
அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அஞ்சாதும் இரக்கமின்றியும் பகைவரொடு பொரும் கடுமறத்தைச் சிறந்த ஆண்டன்மை என்று சொல்வர்; ஆயினும், அப்பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தவிடத்து இரங்கி அதை நீக்குதற் பொருட்டு அவர்க்கு உதவி செய்தலை, அவ்வாண்டன்மைக்குக் கூர்மையென்று சொல்வர் மறநூலார்..
மு. வரதராசனார் உரை
பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
G.U. Pope’s Translation
Fierceness in hour of strife heroic greatness shows; Its edge is kindness to our suffering foes.
– Thirukkural: 774, Military Spirit, Wealth