பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்
ஏதின்மை கோடி உறும். – குறள்: 816
– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட,
அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு
மேலானதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; அறிவுடையானின் பகைமை கோடி மடங்கு நல்லதாம்.
மு. வரதராசனார் உரை
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.
G.U. Pope’s Translation
Better ten million times incur the wise man’s hate,
Than form with foolish men a friendship intimate.
– Thirukkural: 816, Evil Friendship, Wealth