பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல். – குறள்: 831
– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று
தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பேதைமை என்று சொல்லப்படும் ஒரு குற்றம் என்னது என்று வினவின்; தனக்கு கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கந் தருவனவற்றை விட்டு விடல்.
மு. வரதராசனார் உரை
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்.
G.U. Pope’s Translation
What one thing merits folly’s special name.
Letting gain go, loss for one’s own to claim!
– Thirukkural: 831, Folly, Wealth
Be the first to comment