பேதைமையுள் எல்லாம் பேதைமை – குறள்: 832

Thiruvalluvar

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கைஅல்ல தன்கண் செயல்.
– குறள்: 832

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது
என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; ஒருவன் தனக்குத்தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும்.



G.U. Pope’s Translation

‘Mid follies chiefest folly is to fix your love
On deeds which to you station unbefitting prove.

Thirukkural: 832, Folly, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.