பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் – குறள்: 580

Thiruvalluvar

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
– குறள்: 580

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்



கலைஞர் உரை

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.



மு. வரதராசனார் உரை

யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.



G.U. Pope’s Translation

They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all – esteemed courtesy.

 – Thirukkural: 580, Benignity, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.