பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. – குறள்: 738
– அதிகாரம்: நாடு, பால்: பொருள்
கலைஞர் உரை
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நோயின்மை, செல்வம், விளையுள் , இன்ப முண்மை, பாதுகாப்பு ஆகிய இவ்வைந்தும்; ஒரு நாட்டிற்கு அழகு என்று சொல்வர் அறிஞர்.
மு. வரதராசனார் உரை
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
G.U. Pope’s Translation
A country’s jewels are these five: unfailing health, Fertility and joy, a sure defence, and wealth.
– Thirukkural: 738, The Land, Wealth