பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். – குறள்: 972
– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற
திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; ஆயின், அவரவர் செய்யுந் தொழில்கள் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல.
மு. வரதராசனார் உரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
G.U. Pope’s Translation
All men that live are one in circumstances of birth, Diversities of works give each his special worth.
– Thirukkural: 972, Greatness, Wealth.
Be the first to comment