குருவிரொட்டி இணைய இதழ்

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க – குறள்: 358


பிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு. – குறள்: 358

– அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம்



கலைஞர் உரை

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை கெட ,வீட்டிற்கு வினைமுதற் கரணகம் (நிமித்தகாரணம்) ஆகிய செவ்விய பொருளை அறிவதே ஓகியர்க்கு அறிவாவது.



மு. வரதராசனார் உரை

பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.



G.U. Pope’s Translation

When folly, cause of births, departs; and soul can view The truth of things, man’s dignity;- ’tis wisdom true.

Thirukkural: 358, Knowledge of the true, Virtues