குருவிரொட்டி இணைய இதழ்

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் – குறள்: 1015

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
– குறள்: 1015

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும்
வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து அவ்விரண்டிற்கும் நாணுவாரை; உலகத்தார் நாணிற் குறைவிடமென்று சொல்வர்.



மு. வரதராசனார் உரை

பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காவும் நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும்.



G.U. Pope’s Translation

As home of virtuous shame by all the world the men are known, Who feel ashamed for others, guilt as for their own.

 – Thirukkural: 1015, Shame, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link