குருவிரொட்டி இணைய இதழ்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – குறள்: 10


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
– குறள்: 10

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்



கலைஞர் உரை

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர், பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.



மு. வரதராசனார் உரை

இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.



G.U. Pope’s Translation

They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;
None other’s reach the shore of being’s mighty main.

 – Thirukkural: 10, The Praise of God, Virtues