பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். குறள்: 417
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
கலைஞர் உரை
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் பல்வேறு வகையில் திரண்ட கேள்வி அறிவினையுடையார், ஏதேனுமொரு பொருளைத் தவறாக உணர்ந்த விடத்தும், தமக்குப் பேதைமையூட்டுஞ் சொற்களைப் பிறர்க்குச் சொல்லார்.
மு. வரதராசனார் உரை
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
Be the first to comment