பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. – குறள்: 297
– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்
கலைஞர் உரை
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர்
ஒருவன் வாய்மை அறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின், அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம்.
மு.வரதராசனார் உரை
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
G.U. Pope’s Translation
If all your life be utter truth, the truth alone,
‘Tis well, though other virtuous acts be left undone.
– Thirukkural: 297, Veracity, Virtues
Be the first to comment