குருவிரொட்டி இணைய இதழ்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் – குறள்: 487


பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
– குறள்: 487

அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தெளிந்த அறிவுடைய அரசர் ; தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின வுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார் ; அவரை வெல்லு தற்கேற்ற காலம் வரும் வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர்



மு. வரதராசனார் உரை

அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.



G.U. Pope’s Translation

The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.

 – Thirukkural: 487, Knowing the fitting time, Wealth