பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
தாள்வினை இன்மை பழி. – குறள்: 618
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து செய்யவேண்டிய வினைகளை விடாமுயற்சியொடு செய்யாமையே குற்றமாவது.
மு. வரதராசனார் உரை
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
G.U. Pope’s Translation
‘Tis no reproach unpropitious fate should ban;
But not to do man’s work is foul disgrace to man!
– Thirukkural: 618, Manly Effort, Wealth
Be the first to comment