குருவிரொட்டி இணைய இதழ்

பொருள்என்னும் பொய்யா விளக்கம் – குறள்: 753


பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
– குறள்: 753

– அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செல்வம் என்று எல்லாராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்பெறும் நந்தாவிளக்கு; தன்னை உடையவர்க்கு அவர் கருதிய தேயத்துச் சென்று பகையென்னும் இருளைப் போக்கும்.



மு. வரதராசனார் உரை

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.



G.U. Pope’s Translation

Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord’s command.

 – Thirukkural: 753, Way of Accumulating Wealth, Wealth