பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. – குறள்: 938
– அதிகாரம்: சூது, பால்: பொருள்.
கலைஞர் உரை
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும்
மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சூதாட்டு; தன்னைப் பயில்கின்றவன் தோல்வியால் அவன் செல்வத்தைக் கெடுத்து, வெற்றி பெரும் பொருட்டுப் பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; தோல்வி வருத்தத்தாலும் வென்றவன்மீது கொள்ளும் பொறாமையாலும் எழும் சினத்தால் அருள் நோக்கைக் கெடுத்து; இங்ஙனம் இருமையிலும் துன்புற்று வருந்தச் செய்யும்.
மு. வரதராசனார் உரை
சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
G.U. Pope’s Translation
Gambling wastes wealth, to falsehood bends the soul; it drives away
All grace, and leaves the man to utter misery a prey.
– Thirukkural: 938, Gambling, Wealth.
Be the first to comment