குருவிரொட்டி இணைய இதழ்

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது – குறள்: 1002


பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
குறள்: 1002

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செல்வமொன்று மட்டுமிருந்தால் அதனால் எல்லாக் கருமமும் ஆகுமென்று கருதி ; அதைப் பிறர்க்கீயாது இறுகப் பற்றும் மயக்கத்தினால் ; இழிவான பிறப்பு உண்டாம்.



மு. வரதராசனார் உரை

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கும் ஒன்றும் கொடுக்காமல் இறுகப் பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.



G.U. Pope’s Translation

Who giving nought, opines from wealth all blessings springs,
Degraded birth that doting miser’s folly brings.

 – Thirukkural: 1002, Wealth without Benefaction, Wealth