குருவிரொட்டி இணைய இதழ்

பொறுத்தல் இறப்பினை என்றும் – குறள்: 152


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. – குறள்: 152

– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்
காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொறை நன்றாதலால் , பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க; இனி , அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப்பொறையினும் நன்றாம்.



மு. வரதராசனார் உரை

வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.



G.U. Pope’s Translation

Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise.

 – Thirukkural: 152, The Possession of Patience, Forbearance, Virtues