பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். – குறள்: 914
– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.
கலைஞர் உரை
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை
மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக்
கருதுவார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் அறிவினையுடையார்; அறத்தையும் இன்பத்தையும் நோக்காது பொருளையே பொருளாகக் கொண்ட விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற்படியார்.
மு. வரதராசனார் உரை
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.
G.U. Pope’s Translation
Their worthless charms, whose only weal is wealth of gain, Form touch of these the wise, who seek the wealth of grace, abstain.
– Thirukkural: 914, Wanton Women, Wealth.