பொதுநோக்கான் வேந்தன் வரிசையா – குறள்: 528

Thiruvalluvar

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
– குறள்: 528

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின் ; அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் உறவினர் பலராவர் .



மு. வரதராசனார் உரை

அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.



G.U. Pope’s Translation

Where ‘king regards not all alike, but each in his degree, ‘Neath such discerning rule many dwell happily.

 – Thirukkural: 528, Cherishing one’s kindred, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.