புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் – குறள்: 538

Thiruvalluvar

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
– குறள்: 538

– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் சான்றோரும் உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும் ; அவற்றைச் செய்யாது மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லை.



மு. வரதராசனார் உரை

சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.



G.U. Pope’s Translation

Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy.

 – Thirukkural: 538, Unforgetfulness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.