புறம்தூய்மை நீரான் அமையும் – குறள்: 298

புறம்தூய்மை நீரான் அமையும்


புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும். – குறள்: 298

– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்



கலைஞர் உரை

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம்
அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்
வாய்மை வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத்தூய்மை வாய்மையால் அறியப்படும்.



மு.வரதராசனார் உரை

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.