குருவிரொட்டி இணைய இதழ்

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு – குறள்: 956


சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
குறள்: 956

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வசையற்று வருகின்ற எங்குடி மரபோ டொத்து ஒழுகக் கடவேம் என்னும் பூட்கை கொண்டவர்.வறுமை வந்தவிடத்தும் வஞ்சனையைக் கையாண்டு சான்றாண்மையொடு பொருந்தாத செயல்களைச் செய்யார்.



மு. வரதராசனார் உரை

மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார்.



G.U. Pope’s Translation

Whose minds are set to live as fits their sire’s unspotted fame,
Stooping to low deceit, commit no deeds that gender shame.

Thirukkural: 956, Nobility, Wealth.