குருவிரொட்டி இணைய இதழ்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – குறள்: 118


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

– குறள்: 118

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்



கலைஞர் உரை

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரையறுத்துக்காட்டும் துலாக்கோல் போல் ; மனத்திற் சம நிலையாக விருந்து ஒரு பக்கஞ்சாயாது உண்மை யுரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம் .



மு. வரதராசனார் உரை

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.



G.U. Pope’s Translation

To stand, like balance rod that level hangs and rightly weighs,With calm unbiassed equity of soul, is sages’ praise.

 – Thirukkural: 118, Impartiality, Virtues