குருவிரொட்டி இணைய இதழ்

சாதலின் இன்னாதது இல்லை – குறள்: 230


சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை. – குறள்: 230

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத
மனத்துன்பம் பெரியது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம்.



மு. வரதராசனார் உரை

சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.



G.U. Pope’s Translation

‘Tis bitter pain to die. ‘Tis worse to live,
For him who nothing find to give!


 – Thirukkural: 230, Giving, Virtues