குருவிரொட்டி இணைய இதழ்

சீர்இடம் காணின் எறிதற்குப் – குறள்: 821


சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
– குறள்: 821

– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின்
நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அகத்திற் கலவாது புறத்திற் கலந்தொழுகுவாரின் நட்பு; சிறந்த சமையம் வாய்ப்பின் தாக்குவதற்குப் பட்டடை போல் உதவுவதாம்.



மு. வரதராசனார் உரை

அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும்.



G.U. Pope’s Translation

Anvil where thou shalt smitten be, when men occasion find;
Is friendship’s form without consenting mind.

Thirukkural: 821, Unreal Friendship, Wealth