சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின். – குறள்: 195
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
கலைஞர் உரை
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்
அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின்; அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கிவிடும்.
மு. வரதராசனார் உரை
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
G.U. Pope’s Translation
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.
– Thirukkural 195, Not Speaking Profitless Words, Virtues
Be the first to comment