செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். – குறள்: 516
– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்
கலைஞர் உரை
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செய்வானது தன்மையை முதற்கண் ஆராய்ந்து, பின்பு அவனாற் செய்யப்படும் செயலின் தன்மையை ஆராய்ந்து, அதன்பின் அவன் தன்மையும் அவன் செயலின் தன்மையும் காலத்தொடு பொருந்துமாறு அறிந்து; அவை பொருந்து மாயின் அவனை அவ்வினையின்கண் அரசன் ஆளுதலைச் செய்க.
மு. வரதராசனார் உரை
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
G.U. Pope’s Translation
Let king first ask, ‘Who shall the deed perform?’ and ‘What the deed?’
Of hour befitting both assured, let every work proceed.
– Thirukkural: 516, Selection and Employment, Wealth
Be the first to comment