குருவிரொட்டி இணைய இதழ்

செல்லா இடத்துச் சினம்தீது – குறள்: 302


செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற. – குறள்: 302

– அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்



கலைஞர் உரை

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார் மேல் எழின் தனக்கே தீங்காம்; அது தாக்கக் கூடிய எளியார் மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை.



மு. வரதராசனார் உரை

பலிக்காத இடத்தில் (தன்னைவிட வறியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறில்லை.



G.U. Pope’s Translation

Where power is none to wreak thy wrath importent is ill; Where thou hast power thy will to work, ’tis greater, evil still.

 – Thirukkural: 302, Not being Angry, Virtues