செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. – குறள்: 411
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
கலைஞர் உரை
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே, எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம்; அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையானதாகும்.
மு. வரதராசனார் உரை
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
G.U. Pope’s Translation
Wealth of wealth is acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.
– Thirukkural: 411, Hearing, Wealth