செப்பம் உடையவன் ஆக்கம் – குறள்: 112

Thiruvalluvar

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
– குறள்: 112

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்



கலைஞர் உரை

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித்
தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு.



மு. வரதராசனார் உரை

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.



G.U. Pope’s Translation

The just man’s wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.

 – Thirukkural: 112, Impartiality, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.