செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. – குறள்: 887
– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.
கலைஞர் உரை
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல
வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உட்பகை யுண்டான குடியார்; செப்பும் அதன் மூடியும் பொருந்தினாற்போல வேற்றுமை தெரியாது புறத்திற் கூடினாராயினும்; அகத்தில் தம்முட் கூடாதவரேயாவர்.
மு. வரதராசனார் உரை
செப்பின் இணைப்பைப்போல் புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.
G.U. Pope’s Translation
As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath sway.
– Thirukkural: 887, Enmity Within, Wealth.
Be the first to comment