செருக்கும் சினமும் சிறுமையும் – குறள்: 431

Thiruvalluvar

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
– குறள்: 431

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் செல்வம்; மேம்பாட்டுத் தன்மையை யுடைத்து.



மு. வரதராசனார் உரை

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.



G.U. Pope’s Translation

Who arrogance, and wrath and littleness of low desire restrain.
To sure increase of lofty dignity attain.

 – Thirukkural: 431, The Correction of Faults , Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.