செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். – குறள்: 569
– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
போர் வருவதற்கு முன்பே தனக்குப் புகலாக ஓர் அரண் செய்து கொள்ளாத அரசன் ; போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பின்மையால் அஞ்சி விரைந்து கெடுவான்.
மு. வரதராசனார் உரை
முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
G.U. Pope’s Translation
Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.
– Thirukkural: 569, Absence of Terrorism, Wealth