செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் – குறள்: 869

Thiruvalluvar

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
குறள்: 869

– அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள்.



கலைஞர் உரை

அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும்
பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசியல் அறிவில்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால்; அவரை வெறுத்துப் பொருவார்க்கு வெற்றியின்பங்கள் தொலைவில் நீங்கி நில்லா.



மு. வரதராசனார் உரை

அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கன் தொலைவில் நீங்காமல் நிற்கும்.



G.U. Pope’s Translation

The joy of victory is never far removed from those Who’ve luck to meet with ignorant and timid foes.

Thirukkural: 869, The might of Hatred, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.