செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து. – குறள்: 694
– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள்
கலைஞர் உரை
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள்
பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து,
அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வலிமை நிறைந்த அரசரருகில் இருக்கும்போது, அவர்காண ஒருவர் காதிற்குள் மெதுவாகச் சொல்லுதலையும் ஒருவர் முகம் நோக்கிச் சிரித்தலையும் அடியோடு விட்டுவிடுக.
மு. வரதராசனார் உரை
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.
G.U. Pope’s Translation
All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess.
– Thirukkural: 694, Conduct in Presence of the King, Wealth