செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். – குறள்: 420
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
கலைஞர் உரை
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மேனிலை மாந்தர்போல் செவியால் நுகரப்படும் அறிவுப் பொருள்களின் சுவைகளை யுணராது, வாயால் நுகரப்படும் உணவுப் பொருள்களின் சுவைகளைமட்டும் உணரும் கீழ்நிலை மாந்தர்; சாவதினால் உலகிற்கு என்ன இழப்பு? வாழ்வதனால் அதற்கென்ன பேறு?
மு. வரதராசனார் உரை
செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?
G.U. Pope’s Translation
His mouth can taste, but ear no taste of joy can give!
what matter if he die, or prosperous live?
– Thirukkural: 420, Hearing, Wealth
Be the first to comment