குருவிரொட்டி இணைய இதழ்

செவியுணவின் கேள்வி உடையார் – குறள்: 413

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து. – குறள்: 413

– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்



கலைஞர் உரை

குறைந்த  உணவருந்தி  நிறைந்த  அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும்  செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார், நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவரை யொப்பர்.



மு.வரதராசனார் உரை

செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.