குருவிரொட்டி இணைய இதழ்

செயற்கரிய செய்வார் பெரியர் – குறள்: 26


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். – குறள்: 26

– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்



கலைஞர் உரை

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,
சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச்
செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.



மு. வரதராசனார் உரை

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.



G.U. Pope’s Translation

Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.

 – Thirukkural: 26, The Greatness of Ascetics, Virtues