செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. – குறள் : 781
– அதிகாரம்: நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நட்பைப்போல அமைத்துக்கொள்வதற்கு அரிய உறவுகள் வேறு எவை உள்ளன?அதை அமைத்துக் கொண்டால், எடுத்துக்கொண்ட வினைமுயற்சிக்குப் பகைவரால் கேடுவராமற் காத்தற்கு அதைப்போல் அருமையான காவல்கள் வேறு எவை உள்ளன?
மு. வரதராசனார் உரை
நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?
G.U. Pope’s Translation
What so hard for men to gain as freindship true?
What so sure defence ‘gainst all that foe can do?
– Thirukkural: 781, Friendship, Wealth