செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். – குறள்: 258
– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்
கலைஞர் உரை
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; ஓர் உயிரினின்று நீங்கிய வுடம்பை உண்ணார்.
மு. வரதராசனார் உரை
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர் உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்.
G.U. Pope’s Translation
Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave.
– Thirukkural: 258, The Renunciation of Flesh, Virtues