செய்யாமல் செய்த உதவிக்கு – குறள்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
– குறள்: 101

– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

“வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி”
என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது .



மு. வரதராசனார் உரை

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.



G.U. Pope’s Translation

Assistance given by those who ne’er received our aid, Is debt gift of heaven and earth but poorly paid.

 – Thirukkural: 101, The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.