சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று.– குறள்: 307
– அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்
கலைஞர் உரை
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் சிறந்த பண்பென்று பொருட்படுத்தி அதைக்கொண்டவன் கெடுதல். நிலத்தின் கண் அறைந்தவன் கை தப்பாது நோவுதல் போன்றதாம்.
மு. வரதராசனார் உரை
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.
G.U. Pope’s Translation
The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their warth as noble thing.
– Thirukkural: 307, Not being Angry, Virtues