சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் – குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. – குறள்: 57

– அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம்



கலைஞர் உரை

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும் ?அப்பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.



மு. வரதராசனார் உரை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.



G.U. Pope’s Translation

Of what avail is watch and ward?
Honour’s a woman’s safest guard.

 – Thirukkural: 57, The Goodness of the help to Domestic Life, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.