சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. – குறள்: 18
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
கலைஞர் உரை
வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்
வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மழை பெய்யாவிடின்; இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டைவிழாவும் நடைபெறா.
மு. வரதராசனார் உரை
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
G.U. Pope’s Translation
If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.
– Thirukkural: 18, The Excellence of Rain, Virtues